யாழ்ப்பாணத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழப்பு

#SriLanka #Jaffna #Lanka4 #இலங்கை #குழந்தைகள் #baby #லங்கா4 #தாய்ப்பால் #யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழந்தாக அதன் தாய் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தை நேற்றைய தினம் தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி உள்ளது.

 அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர் அறிக்கையிட்டார்.

 குழந்தையின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வைத்தியசாலையில் கோரிய போது, யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெற்றே சடலத்தை கையளிக்கலாம் என நெடுந்தீவு வைத்தியசாலையில் கூறியுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு வைத்தியர் தொடர்பு கொண்டு கேட்ட பின்பு குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பணித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!