'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக நடித்த சாரா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

#Cinema #Actress #TamilCinema
Mani
2 years ago
'தெய்வ திருமகள்'  படத்தில் விக்ரமின் மகளாக நடித்த சாரா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

2011ஆம் ஆண்டு வெளியான 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக ‘நிலா’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனத்தைப் பெற்றார் சாரா. அதைத் தொடர்ந்து விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்தில் சாரா தோன்றினார். 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் இளம் நந்தினி வேடத்தில் நடித்து குறிப்பிடத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினார்.

சாரா சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அதனால் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'தெய்வ திருமகள்' படத்தின் மூலம் அவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய விஜய் தான் கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்த இருக்கிறார். இதுகுறித்து விஜய் கூறுகையில், 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் மணிரத்னம் சாராவை தெய்வீக அழகுடன் சித்தரித்துவிட்டார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அவரை நான் 2025-ம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன் என்றார். விஜய் தற்போது அருண் விஜய் நடிப்பில் 'மிஷன்: சேப்டர்-1' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!