பீட்சா 3 படத்தின் படக்குழு புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
#Cinema
#Actor
#TamilCinema
#Tamilnews
Mani
2 years ago

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மற்றும் பிற நடிகர்கள் நடித்த பீட்சா திரைப்படம் வெற்றி தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. தற்போது மங்காத்தா, மேகா, ஜீரோ, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த அஸ்வின் நடிப்பில் பீட்சா 3 திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் மோகன் கோவிந்த இயக்கியுள்ளார். இதில் காளி வெங்கட், பவித்ரா, கௌரவ் நாராயணன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முதலில் மே 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இதனையடுத்து இப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



