கோவையில் உள்ள ஈஷா யோகா மைய ஆசிரமத்தில் சமந்தா தியானம்

#India #Cinema #TamilCinema #Yoga #Tamilnews #Coimbatore
Mani
2 years ago
கோவையில் உள்ள ஈஷா யோகா மைய ஆசிரமத்தில் சமந்தா தியானம்

சமந்தா தெலுங்கு திரைப்படமான குஷி மற்றும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்த பிறகு, அவர் கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தை தொடங்கினார். சில தினங்களுக்கு முன்பு வேலூரை அடுத்து ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள சுவர்ண லட்சுமி அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார்.

இந்நிலையில் தற்போது கோவையில் உள்ள ஈஷா யோகா மைய ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு, அவர் தனது கழுத்தில் சிவப்பு அரளி மலர் மாலையை அணிவித்து, கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யும் புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் வெளியிட்டு தியானமே என் வலிமை என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். அவை வைரலாகின்றன.

சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக ஏற்கனவே சிகிச்சை பெற்றும் பூரண குணமாகவில்லை. இதையடுத்து ஒரு வருடம் சினிமா துறையில் இருந்து விலகி, மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்து இருக்கிறார். இதற்காக ஏற்கனவே மூன்று புதிய படங்களில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!