திருமணத்திற்கு முன் கர்ப்பிணி நடிகைகளை கேலி செய்தாரா டாப்சி?

#Cinema #Actress #TamilCinema
Mani
2 years ago
திருமணத்திற்கு முன் கர்ப்பிணி நடிகைகளை கேலி செய்தாரா டாப்சி?

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த டாப்ஸி, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இணையதளம் ஒன்றில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், ஒரு கேள்விக்கு ஆச்சரியமான பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதாவது, உங்கள் திருமணம் எப்போது என்று ரசிகர் ஒருவர் டாப்ஸியிடம் கேட்டார். "நான் இன்னும் கர்ப்பமாகவில்லை, அதனால் எனக்கு விரைவில் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை" என்று டாப்சி பதிலளித்தார்.

சில இந்தி நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டனர். கர்ப்பமான பிறகு இந்தி நடிகை அலியாபாத் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஏப்ரல் 14ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டது, அலியாபாட்டுக்கு நவம்பர் 6ஆம் தேதி குழந்தை பிறந்தது.

இதுபோல் இலியானாவும் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகி உள்ளார். அலியாபட், இலியானாவை போன்று திருமணத்துக்கு முன்பு கர்ப்பமான நடிகைகளை கேலி செய்யும் வகையில் மறைமுகமாக இந்த பதிலை டாப்சி தெரிவித்து இருப்பதாக இந்தி பட உலகினர் பேசுகிறார்கள். டாப்சியின் பதில் வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!