'டைனோசர்ஸ்' படக்குழு கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்தனர்
#India
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#Director
#Tamilnews
#Movie
Mani
1 year ago

அறிமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டைனோசர்ஸ்’. உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பிற நடிகர்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டு 'டைனோசர்ஸ்' படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இப்படத்தில் தனா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ரிஷியும், ஆறுமுகமாக ரமனாவும், பாபு கிளியப்பனாகவும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



