உள்ளாடைக்குள் மறைத்து கடத்தப்பட்ட பாம்புகள்; பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகள்!

#China #Police #world_news #International #Tamilnews #Breakingnews #Security
Mani
2 years ago
உள்ளாடைக்குள் மறைத்து கடத்தப்பட்ட பாம்புகள்; பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகள்!

வெளிநாடுகளில் தங்கத்தை விதவிதமான முறையில் கடத்தி வருவார்கள். அவற்றில் சில தான் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்குவதுண்டு. ஆனால் இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக வித்தியாசமான முறையில் ஒரு பெண் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு உள்ளார்.

சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லை பகுதியில் சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லையை கடக்கும் இடத்தில் நடந்து செல்ல முயன்ற ஒரு பெண்ணை சோதனையிட்டபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குவாங்டாங் மாகாணத்தில் உள்ள புக்சியன் துறைமுகத்திற்கு ஹாங்காங் செல்ல ஒரு பெண் வந்தார்.

அந்தப் பெண்ணை சந்தேகத்தின் பெயரில் அழைத்த சுங்க அதிகாரிகள் அவரை சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரது மேல் உள்ளாடையில் மார்பகங்களுக்கு இடையே 5 பாம்பு குட்டிகளை வெவ்வேறு துணி பைகளில் கட்டி மறைத்து வைத்து கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இந்த நிலையில் அந்த பெண்ணிடம் இருந்த பாம்பு குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, மேலும் கடத்தலில் ஈடுபட்ட அந்தப் பெண் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நூதனமான முறையில் மேல் உள்ளாடைக்குள் பாம்புகளை மறைத்து வைத்து கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!