சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #2023 #Tamilnews
Mani
2 years ago
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. 'மாவீரன்' திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படத்தை எதிர்த்து ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில் ‘மாவீரன்’ படத்தை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பு போட வேண்டும் உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட்டு, ஐஜேகே கொடியை பிரதிபலிக்காதவாறு, காட்சிகளை மாற்றியமைத்த பின்னரே ஓடிடி, சாட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!