கொத்துக்குண்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவை நியாயமான கண்ணோட்டத்தில் பார்க்குமாறு கூறுகிறார் செலன்ஸ்கி!

#world_news #Russia #Ukraine #Lanka4
Dhushanthini K
2 years ago
கொத்துக்குண்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவை நியாயமான கண்ணோட்டத்தில் பார்க்குமாறு கூறுகிறார் செலன்ஸ்கி!

உக்ரைனுக்கு கொத்துக்  குண்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவை நியாயக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். 

உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி இன்று (12.07) பிற்பகல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க இருக்கிறார். இந்நிலையில், கொத்துக்குண்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செலன்ஸ்கி மேற்படி குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், "எங்கள் அமெரிக்க பங்காளிகளுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கும் தருணங்கள் உள்ளன, ஆனால் நான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், அமெரிக்காவிலும் அமெரிக்க காங்கிரஸிலும் இது ஒரு சவாலாக இருந்தது என்பதை நான் அறிவேன், 

மேலும் கிளஸ்டர் வெடிமருந்துகள் தொடர்பாக ஆதரவைப் பகிர்ந்து கொள்ளாதவர்களும் உள்ளனர். "நாம் இதை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் - நியாயமான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் போரில் இராணுவ இலக்குகளுக்கு எதிராக மாத்திரமே கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்படும் எனவும்  அவர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவது நாட்டில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!