இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீட்பை புகழ்ந்த எரிக் சொல்ஹெம்

#SriLanka #Lanka4 #இலங்கை #பொருளாதாரம் #economy #Erick Solheim
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீட்பை புகழ்ந்த எரிக் சொல்ஹெம்

சென்ற வருடத்தின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை தனது முதுகெலும்பை முறிக்காது மீள திரும்பியமை இலங்கை மக்களுக்கே உரிய நெருக்கடியான நிலையிலிருந்து மீளும் தன்மையை காட்டுகிறது என எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.

 இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் கடந்த வருடம் அசாதாரண பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அது இலங்கை மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என பலர் நினைத்தனர் என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

 எனினும் இலங்கை மக்களிற்கே உரிய மிகவும் நெருக்கடியிலிருந்து மீளும் திறன் காரணமாக இது சாத்தியமாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 அதன்காரணமாக இலங்கையால் அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கி செல்வது குறித்து சிந்திக்க முடிகின்றது எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

 தற்போதைய சூழ்நிலை உருவாகுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மகத்தான வாய்ப்புகளை ஆராயும் தருணம் மற்றும் தற்போது வந்துள்ள சுற்றுாலத்துறையை முன்னெடுக்கும் ஆற்றல் ஆகியன அதிக திறன் கொண்ட துறைகளாக திகழ்கின்றன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4