நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’ டிரைலர் ரெடி!
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#Director
#Tamilnews
Mani
2 years ago

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான அட்லீ தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் 'ஜவான்' படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம், நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அனிருத் பாலிவுட் திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'ஜவான்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படக்குழு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளதோடு, படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



