'டிமாண்டி காலணி 2' படக்குழுவினர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளன

#Cinema #TamilCinema #Film #Movies
Mani
2 years ago
'டிமாண்டி காலணி 2' படக்குழுவினர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளன

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'டிமான்ட்டி காலனி' படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 7 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை 5:01 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி, தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

'டிமான்ட்டி காலனி -2' படத்தை செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!