இரசாயன ஆயுதங்களை முழுவதுமாக அழித்துள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

பல தசாப்தங்களாக அமெரிக்கா வைத்திருந்த இரசாயன ஆயுதங்களை முழுவதுமாக அழிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு "வரலாற்று வெற்றி என அழைத்தது.
முதலாம் உலகப் போரின் போது இரசாயன வாயுக்களின் வெளியேற்றம் பெருமளவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த 1997 ஆம் ஆண்டு இரசாயன ஆயுத மாநாட்டில் அமெரிக்கா கையெழுத்திட்டிருந்தது.
இருப்பினும் அமெரிக்காவிடம் இராசயன ஆயுதங்கள் இருப்பதாக வெகுகாலமாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.இந்த சூழ்நிலையில் தான் இரசாயன ஆயுதங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது.



