விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
#Cinema
#TamilCinema
#Film
#release
#Tamilnews
#Movie
Mani
2 years ago

விஷாலின் 33வது படமான 'மார்க் ஆண்டனி' படத்தை தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன் திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக நாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் மற்றும் பிற நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்த திரைப்படம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.



