பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் டீசர் வெளியீடு அறிவிப்பு!
#India
#Cinema
#Actor
#Actress
#Director
#release
#trailer
#Movie
Mani
2 years ago

‘ஆதிபுருஷ்’ படத்திற்குப் பிறகு நடிகர் பிரபாஸின் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ’சலார்’ உள்ளது. ’கேஜிஎஃப்’ படத்தினை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் இந்த மாதம் 6-ம் தேதி அதிகாலை 5.12 மணிக்கு வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது.
ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் ’சலார்’ படத்தினை பிரம்மாண்டமானப் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் நடிகர் பிரபாஸூக்கு ஜோடியாக நடிகை ஷ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும் நடிகர்கள் பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்திய அளவில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



