மாமன்னன் படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்
#Cinema
#TamilCinema
#Film
#celebration
#Movie
Mani
2 years ago

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டால் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வோடு தொடர்புடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.



