வீட்டிலுள்ள சுவாமி சிலைகளுக்கு தெய்வசக்தியை கொண்டு வரும் முறை

#God #spiritual #Home #Lanka4 #ஆன்மீகம் #வீடு #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
வீட்டிலுள்ள சுவாமி சிலைகளுக்கு தெய்வசக்தியை கொண்டு வரும் முறை

நாம் செய்யும் பூஜைகள், உச்சரிக்கும் மந்திரங்களின் தன்மை நிறையும் போது வீட்டில் எப்போதும் தெய்வ சக்தி நிறைந்து, நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்.

 கோவிலில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு முன் யந்திரங்கள், பூஜைகள், ஹோமங்கள் செய்வதுண்டு. அபிஷேகங்கள், மந்திர ஜபம், பூஜைகள் ஆகியவற்றால் கோவிலில் உள்ள சிலைகள் தெய்வ சக்தியுடன், உயிரோட்டம் நிறைந்ததாக இருக்கின்றன.

 ஆனால் இது போன்ற யாகங்கள், பூஜைகள், மந்திர ஜபம் ஆகியவற்றை நாம் வீட்டில் தொடர்ந்து செய்வது கிடையாது. இதற்கு புற்களில் மிகவும் உயர்ந்ததாக, புனிதத்தன்மையும் தெய்வத் தன்மையும் நிறைந்ததாக கருதப்படும் தர்ப்பை புல்லினை பயன்படுத்தலாம்.

 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யும் போது கலசங்களிலும், பூஜைகள், யாகங்கள் செய்யும் போதும் தர்ப்பை புல்லினை பயன்படுத்துகிறார்கள். தர்ப்பை என்பது மனிதனுக்கும், பிரபஞ்சத்தில் உள்ள இறைசக்திக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.

 தர்ப்பை புல்லுக்கு எதிர்மறை சக்திகளை அழித்து, நேர்மறை சக்திகளை வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு. இதனாலேயே இதனை பூஜைகளில், வீடுகளில் வைத்து பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தர்ப்பை புல்லினை வீட்டிலுள்ள சுவாமி சிலைகளில் தெய்வ தன்மை நிறைந்திருக்க பயன்படுத்தலாம். தர்ப்பை புல் எந்த நிலையில் இருந்தாலும் அதன் தன்மை மாறாது. அதனால் சுவாமி சிலைகளை சுத்தம் செய்து போது தர்ப்பை புல்லினை எரித்த சாம்பலைக் கொண்டு தேய்த்து, சுத்தம் செய்வதால் சுவாமி சிலைகளில் உள்ள தெய்வத் தன்மையானது குறையாமல் இருக்கும்.

 தர்ப்பை புல்லினை எரித்த சாம்பலைக் கொண்டு சுவாமி படங்களுக்கு பொட்டு வைத்து வழிபட்டு வந்தால் சுவாமி படங்கள் எப்போது உயிரோட்டம் உள்ளதாக இருக்கும்.

 வீட்டின் பூஜை அறையிலும் தர்ப்பை புல்லினை வைத்து வரலாம். இதனால் வீட்டில் தீயசக்திகள் எப்போதும் அண்டாமல் இருக்கும். தர்ப்பை புல் மீது வைக்கப்பட்ட சுவாமி படங்களுக்கு நாம் பூஜை செய்து, மந்திரங்கள் சொல்லும் போது அதன் சக்தி இரட்டிப்பாகும். அந்த மந்திரங்களின் சக்தி, சுவாமி படங்களுக்கு தொடர்ந்து உயிர்ப்பை ஏற்படுத்தி வைக்கும்.