16 மாத குழந்தையை வீட்டில் தனியாக விட்டுச்சென்ற தாய் - உயிரிழந்த குழந்தை

#Death #Arrest #Women #America #baby
Prasu
2 years ago
16 மாத குழந்தையை வீட்டில் தனியாக விட்டுச்சென்ற தாய் - உயிரிழந்த குழந்தை

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமையால் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தாய் சுற்றுலா சென்றதால் வீட்டில் தனியாக விடப்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளார்.

ஒகியோ மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்டல் கேன்டலாரியோ என்ற 31 வயதான பெண், தனது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு 10 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

வீடு திரும்பிய அவர், குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்ததால் மருத்துவ உதவியாளர்களை அழைத்துள்ளார். அவர்கள் குழந்தை இறந்து கிடந்ததை உறுதி செய்ததுடன் படுக்கையில் மலம், சிறுநீர் இருந்ததை பார்த்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து, விசாரணை நடத்தி கேன்டலாரியோவை பொலிஸார் கைது செய்தனர்.

 அடிக்கடி குழந்தையை வீட்டில் தனியாக விட்டு செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்ததாகவும், பல முறை கூறியும் அவர் கேட்கவில்லையெனவும் பொலிஸாரிடம் அக்கம்பக்கத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!