உடல் வலிமை பெற பேரிச்சம்பழம் மில்க் ஷேக்
#Tamil Nadu
#Health
#Healthy
#Recipe
#Cooking
#How_to_make
Mani
2 years ago

தேவையான பொருட்கள்:
2 கப் பால்
1 கப் பேரிச்சம்பழம்
2 டேபிள் ஸ்பூன் நியூட்ரெலா
செய்முறை:
முதலில் பேரிச்சம்பழத்தில் உள்ள விதைகளை நீக்கி விடவும்.
பின்னர் அடுப்பில் பால் காய்ச்சும் பாத்திரத்தை வைத்து பாலை காய்த்துக்
கொள்ளவும்.
காய்ச்சிய பாலில் பேரிச்சம் பழம் மற்றும் நியூட்ரெலா சேர்த்து கலந்து விடவும். அதனை 15-30 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
இனி மிக்சி ஜாரில், ஊறிய பேரீச்சம்பழங்களை, சேர்த்து அதனுடன் ஊறிய பால் சிறிதளவு ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.
பின் மொத்த பாலையும் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதனை வடிகட்டி மூலம் வடிகட்டி பரிமாறலாம்.
வடிகட்டுவதால், நாம் பேரிச்சம் பழங்கள் சேர்திருப்பதே தெரியாது மிகவும் சுவையாக இருக்கும்.
அவ்வளவுதான். சுவையான பேரிச்சம்பழம் சாக்லேட் மில்க் ஷேக் ரெடி.



