சென்னை அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து; 10 பேர் காயம்!

#Tamil Nadu #Accident #Tamil People #Bus #Tamil #Tamilnews #Chennai
Mani
2 years ago
சென்னை அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து; 10 பேர் காயம்!

தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு வந்துகொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அந்த பேருந்து அதிவேகமாக வந்துகொண்டிருந்த நிலையில், முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது சொகுசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

 தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உடனடியாக விபத்துக்குள்ளான பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!