இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் பாலுறவு மூலம் பரவும் சிபிலிஸ் நோய்
#Sexual Abuse
#Disease
#England
Prasu
2 years ago

ஒரு காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகளிடம் மட்டுமே காணப்பட்டதாக கருதப்படும் மோசமான நோய் ஒன்று இங்கிலாந்தில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இரண்டு உலகப்போர்களுக்குப் பின் அதிகரிக்கத் துவங்கிய நோய் சிபிலிஸ் என்னும் பாலுறவு மூலம் பரவும் நோய். பெனிசிலின் என்னும் விலைமதிப்பில்லாத ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், ஆணுறைகள் பயன்பாட்டைத் தொடர்ந்தும் குறையத் தொடங்கியது.
தற்போது இங்கிலாந்தில் இந்த சிபிலிஸ் நோய் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில், 15 சதவிகிதம் அதிகரித்து 8,700 பேருக்கு இந்நோய் தொற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
1948க்குப் பிறகு இந்த அளவுக்கு சிபிலிஸ் தொற்று பரவியுள்ளது இப்போதுதான்.



