பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்!
#Death
#Accident
#Bus
#Tamilnews
#Breakingnews
#Died
#ImportantNews
#Injury
Mani
1 year ago

கடலூர்
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. இந்த கோர விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 5 பேர் பலியாகி உள்ளனர். மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
கடலூரில் விபத்து நடந்த இடத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவ தேவைகளை உடனுக்குடன் கொடுக்க நடவடிக்கை எடுத்து வர்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.



