தேடுதல் வேட்டையில் இங்கிலாந்து பிரதமர்: சட்டவிரோதமாக குடியேறிய 105 பேர் கைது

#UnitedKingdom
Mayoorikka
2 years ago
தேடுதல் வேட்டையில் இங்கிலாந்து பிரதமர்: சட்டவிரோதமாக குடியேறிய  105 பேர் கைது

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு பிரதமர் ரிஷி சுனக் பெரும் நடவடிக்கை எடுத்து வருகின்றார். 

 சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கியுள்ளார்.

 இந்த நிலையில் தற்போது சட்டவிரோதமாக குடியேறியவர்களை பிடிப்பதற்காக ரிஷி சுனக் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தேடுதல் வேட்டையில் இறங்கி பலரை கைது செய்துள்ளார்.

 அதிகாரிகளுடன் புறப்பட்ட ரிஷி சுனக், ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள் மற்றும் வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆராய்ந்து வருகின்றார். இந்தத் தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இங்கிலாந்திற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை அனுமதிக்கக்கூடாது என்பதில் பிரதமர் ரிஷி சுனக் உறுதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!