பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை

#SriLanka #Women #Article #Lanka4
Kanimoli
11 months ago
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை

பெண்மையை போற்றாத எந்த ஒரு சமூகமும் வரலாற்றில் வென்றதாக சரித்திரம் கிடையாது.பெண்கள் பொது வெளியில் வருவதும்,முகம் காட்டி களத்தில் இறங்குவது என்பது பெண்களின் பேராண்மையை வெளிக்காட்டும் செயலாகும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிபாதி இடம் கொடுத்து பெண்ணுரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களை போற்றித் தொழுகிறார் பாரதி.பெண் என்றால் ஒரு பலம் குறைந்த உயிராகவே பார்க்கிறது இந்த சமூகம்.

 பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றி, பொதுப்புத்தியை மூலமாக சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டுமானால் முதலில் பெண் கொடுமை ஆணாதிக்கக சமூகத்தின் திணிப்பு என்பன ஒழிய வேண்டும்.

 நாம் தாய்வழிச்சமூகம் அதனால் பெண் அடிமைத்தனத்தை ஒழுத்து அகம்பாவங்களையும் அகந்தையையும் ஒழித்து பெண்சுதத்திரத்தை நிலைநாடட வேண்டியது நம் கட்டாயமாகும். ஆண் பெண் சரிப்பாகம் என்று வாய்ப்பேச்சுக்கே இடம் கொடுக்கின்றோம். 

பெண் தலைமைத்துவங்கள் திட்டமிட்டு பறிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கி அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் நிலைக்கு தள்ளுகிறது இச்சமூகம். ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!’ என ஆன்றே உரக்கச்சொன்னான் புரட்ச்சிக்கவி.

பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வள்ளலார் ஆணும் பெண்ணும் இச்சமூகத்தில் சமமானவர்கள் என்பதைப் ஏற்றுக்கொள்வதே பாலினச் சமத்துவம் என கூறினார். பெண்ணினனத்தை போற்றி சிம்ம சொர்ப்பணத்தில் அமர வைப்பதே தமிழினத்தின் தலையாய கடமை அதையே அந்த மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ‘பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!’என உரக்கச்சொல்லி பெண்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றினார், ஆகவே பெண்விடுதலை சிந்தனைகள் பரிபூரணமாக முழுமை பெற வேண்டும் என்பதே திண்ணம்.

-சிந்து-