மறுதேர்வு; மழை பெய்தாலும் பிளஸ்-2 துணைத்தேர்வை 56 ஆயிரம் பேர் எழுதினர்!
#Tamil Student
#students
#Tamilnews
#Breakingnews
#School Student
#ImportantNews
Mani
2 years ago

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் மீண்டும் தேர்வெழுதி உயர்கல்வியை தொடர வாய்ப்பு உள்ளது. அதன்படி, பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, பள்ளிகளில் சேரும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் இருவருக்கும் கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது.
துணைத் தேர்வெழுத 39,983 மாணவர்களும், 18,013 மாணவிகளும் என மொத்தம் 56 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த மாணவர்களுக்காகவே இன்று (திங்கட்கிழமை) தேர்வு நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டது.
தமிழகம் முழுவதும் 194 மையங்களில் துணைத் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஆனால் துணைத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டதால், மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் தேர்வெழுத முடிந்தது.



