நெரிசலில் நாம் தினமும் சிக்குண்டு தவிப்பதால் உடல், மன ரீதியாக ஏற்படும் பாதிப்புக்கள்

#Health #Disease #Road #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
நெரிசலில் நாம் தினமும் சிக்குண்டு தவிப்பதால் உடல், மன ரீதியாக ஏற்படும் பாதிப்புக்கள்

நாம் தினமும் வார இறுதி நாட்களைத்தவிர ஏனைய நாட்களில் பாடசாலைக்குச் செல்லவோ அல்லது வேலைக்குச்செல்லவோ தினமும் வழியில் நெரிசலில் சிக்குவதுண்டு.

 இவ்வாறு சிக்குவதானால் நாம் பெரும் சங்கத்திற்கு மட்டுமல்ல நோய்களுக்கும் ஆளாகிறோம். இன்றைய பதிவில் நெரிசலில் சிக்குவதானல் நமக்கு ஏற்படும் நோய்களையே பார்க்க விருக்கிறோம்.

 இதய நோய்

 நெரிசலில் சிக்கும் போது காற்று மாசுபடுவதுடன் இதயம் சீராக செயல் படுவதை கடினமாக்குகிறது. இதனால் நாடளடைவில் இதய நோய்க்கான ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.

 மூச்சு விடுதலில் சிரமம்

 வாகன நெரிசிலின் போது மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் சுவாச சம்பந்தப்பட்ட நோய்கள் அல்லது சுவாச புற்றுநோய்கள் நாளடைவில் ஏற்படவும் காரணமாகிறது.

 மன அழுத்தம்

 நெரிசலில் சிக்கித்தவிப்பது அதிக மனவழுத்தத்தினை உண்டு பண்ணவல்லது. பின்னர் அந்த மனவழுத்தமானது உடலில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நெரிசலின் தாக்கம் துாக்கத்திலும் வரக்கூடியதால் உடல் ரீதியாக மட்டுமன்றி மனரீதியாகவும் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தினை அதிகரிக்க வழிவகுக்கும்.

 எதிர்ப்புசக்தி

 அசுத்தக்காற்றை சுவாசிப்பதனால் உடலில் நோய் எதிரி்ப்பு சக்தியை பலவீனமாக்கி இலகுவில் நோய்கள் ஏற்பட நோய் எதிர்ப்பு தன்மையை கடினமாக்குகிறது.

 எனவே இதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நேரத்திற்கு இடத்தினை அடையவும் வேண்டும் அதே வேளை நெரிசலில் இருந்து விடுபட அதனை தவிர்க்க முடியாதுமுள்ளது அல்லவா? இதற்கு இருக்கும் வழி நாம் என்றும் பயன்படுத்தும் முகக்கவசம். இதனை அணிந்து எத்தனை நெரிசலிலும் சென்று வரலாம்.