'மாமன்னன்' படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு
#Cinema
#Actor
#TamilCinema
#2023
#trailer
#Movies
Mani
2 years ago

‘கண்ணை நம்பாதே’ படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இதற்கு முன் 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்குகிறார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் இப்படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள 'மாமன்னன்' படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், தற்போது 'மாமன்னன்' படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாமன்னன்' படத்தின் டிரைலர் நாளை (ஜூன் 16) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.



