அன்னாசிப் பழத்தை 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தேகம் பளபளக்கும். அதன் ஏனைய பயன்கள்....

#Health #Benefits #Lanka4 #skin #ஆரோக்கியம் #பயன்பாடு #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
அன்னாசிப் பழத்தை 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தேகம் பளபளக்கும்.  அதன் ஏனைய பயன்கள்....

வெப்பமான காலங்களில் தாகத்திற்கு உட்கொள்ளக் கூடிய சிறந்த பழம் அன்னாசிப்பழமாகும். இதற்கு செந்தாழை என்பது மற்றொரு பெயராகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இது பிரமிலசே இனத்தைச்சேர்ந்த தாவரம் ஆகும்.

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். 

மேலும் முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி,எல்லா வித கண் நோய்கள், எல்லா விதகாது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவுபோன்றவை குணமடையும்.

 மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்க அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். 

பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும். அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச்சுத்தப்படுத்துவ தில் சிறந்தது.

 தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியைதீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. 

இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வைகுறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.