கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
#Tamil Nadu
#Temple
#spiritual
Mani
2 years ago

கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அம்பாள், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட தனிச் சடங்குகள் நடத்தப்பட்டன. பின்னர் கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து திரளான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்து கொண்டவர்கள் சுவாமிக்கு அகல் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜபிள்ளை தலைமையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.



