நமது கண் பார்வையை கூர்மையாக வைத்திருக்க உதவும் பழங்கள்.

#Health #Eye #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4 #பழங்கள்
Mugunthan Mugunthan
10 months ago
நமது கண் பார்வையை கூர்மையாக வைத்திருக்க உதவும் பழங்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கு அவனது உறுப்புக்களில் கண்ணானது இன்றியமையாததாகும். கண் பார்வை சீராகவும் கூர்மையாகவும் இருந்தாலே இவ்வுலகினை அவன் கண்டு ரசிக்க முடியும். 

உலகில் நடக்கும் நடத்தைகள் அனைத்தினையும் யாரலும் நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும் அதனை அறிந்து கொள்ள வாசிப்பு உதவுகிறது. அதற்கு எவ்வயதினருக்கும் கண் கூர்மையாக இருக்க வேண்டும். இன்றைய பதிவில் கண்ணினை கூர்மையாக வைத்திருக்க எடுத்துக்கொள்ள வேண்டிய பழவகைகள் யாது எனப்பார்போம்.

சிட்ரஸ் வகையை சேர்ந்த ஆரஞ்சு பழம் முதன்மை வகிக்கிறது. காரணம் அதன் நீரடக்கத்தில் உள்ள நீரானது கண்களை நீரேத்துடனும் அதில் உள்ள விற்றமின் சி செல்களின் அழற்சியையும் தடுக்கிறது.

 அடுத்ததாக ஆப்ரிகாட் பழத்தில் காணப்படும் பீட்டா கரோட்டின், கண்கள் மற்றும் கருவிழி ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் இப்பழத்திலுள்ள ஜிங், செப்பு மாகுலர் சிதைவு போன்ற பிரச்சினைகளை தடுக்கும்.

புளுபெரிப்பழத்தில் காணப்படும் கூறுகள் கண்களில் உள்ள இரத்தநாளங்களின் சீரான இரத்தவோட்டத்தி்ற்கும் கண்பார்வை பிரச்சினைகளுக்கும் நல்லது.

 பப்பாளிப்பழத்தில் காணப்படும் சில நொதியங்களால் கண்களின் ஆரோக்கியம் காக்கவும் பார்வை கோளாறுகளை சீராக்கவும் செய்யும்.

 மேலும் கிவி, மாம்பழம், ஸ்ரோபெரிப்பழமும் கண்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயப்பவை.