மிகக்குறைந்த விலையில் 'பிராட்பேண்ட்' சேவை; தனியாருக்கு போட்டியாக கேரள அரசு!
#India
#Tamilnews
#Kerala
#ImportantNews
Mani
2 years ago

திருவனந்தபுரம்
அனைவருக்கும் இணையதள சேவை கிடைக்கும் நோக்கத்தில், குறைந்த விலையில், 'பிராட்பேண்ட்' இணையதள சேவையை கேரள அரசு துவங்கியுள்ளது.
இதையடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணையதள சேவை வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக, 'பிராட்பேண்ட்' இணைய தள சேவையை மாநில அரசு நேற்று முன்தினம் துவங்கியது.
'கேபான்' எனப்படும், 'கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்.



