காலையில் தேநீருடன் பிஸ்கட் உண்பது உடலுக்கு ஆபத்தானது ஏன் தெரியுமா?

#Health #Benefits #Lanka4 #Tea #ஆரோக்கியம் #பயன்பாடு #லங்கா4
Mugunthan Mugunthan
11 months ago
காலையில் தேநீருடன் பிஸ்கட் உண்பது உடலுக்கு ஆபத்தானது ஏன் தெரியுமா?

நம்மில் பலர் காலையில் தேநீருடன் பிஸ்கட் சாப்பிடுவது வழக்கம். இது உடல் நலத்திற்கு ஆபத்தானது என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் யாது என இன்றைய பதிவில் பார்க்கலாம்.

 பிஸ்கட்டானது கோதுமை மாவினால் தயாரிக்கப்படுகிறது. அதன்போது சேர்க்கப்படும் சில பொருட்கள் உடல் நலத்தி்ற்கு ஆபத்தானது. முக்கியாக பதப்படுத்த சேர்க்கபடு்ம் காரணிகளாகும்.

பிஸ்கட்டில் பெரும்பாலும் சர்க்கரை அல்லது உப்பு அதிகளவில் இருக்கும். இது உடலுக்கு உகந்ததல்ல. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினை இவை அதிகரிப்பது மட்டுமல்லமால் எடையையும் அதிகரிக்கும்.

 பிஸ்கட் வாங்கும் போது நார்ப்பொருட்கள் அடங்கிய பிஸ்கட் வாங்குவது நன்மை பயக்கும். எப்படியாயினும் பிஸ்கட் மற்றும் தேநீர் சேர்க்கை தவிர்க்க வேண்டியதாகும்.