உலக வங்கியிடமிருந்து 450 மில்லியன் டொலர்கள் உதவிக்கு ஒப்புதல்!

#Sri Lanka #Sri Lanka President #World Bank
Mayoorikka
3 months ago
உலக வங்கியிடமிருந்து  450 மில்லியன் டொலர்கள் உதவிக்கு ஒப்புதல்!

நிபந்தனைகளை தளர்த்தி உலக வங்கி உதவி கோரவிருந்த கடைசி வினாடியில் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து 450 மில்லியன் டொலர்கள் உதவிக்கு ஒப்புதல் அளிக்க முடிந்தது.

 நிதி அமைச்சின் அதிகாரிகள், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் பலர் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பொருத்தமான ஆவணம் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது உலக வங்கி அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று பகுதி வேலைத்திட்டம் உரிய உதவித் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சாகல ரத்நாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் அதனை அங்கீகரிப்பதற்காக பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.

 பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் உலக வங்கி அதிகாரிகள் முன்வைத்த பல நிபந்தனைகளை தளர்த்துவதில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

 இலங்கையின் அறிக்கையை உலக வங்கி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்த நிதியாண்டு முடிவதற்குள் இலங்கைக்கு 450 மில்லியன் டொலர்கள் உதவித்தொகை கிடைக்கும்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு