சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து விலகும் இலங்கை?

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து விலகும் இலங்கை?

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் 2027ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

 பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  சர்வதேச நாணய நிதியத் திட்டத்தில் இருந்து கொண்டே அரச சேவையை பலப்படுத்த முடிந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் எந்தவொரு சவாலையும் வெற்றிகொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்துள்ளது.

 2027ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்வோம். இந்த விடயத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிக்கு நேரடியாகவே கூறியுள்ளார் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751148871.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!