இஸ்ரேல் மற்றும் அர்கியா எயார்லைன்ஸ் இலங்கைக்கு நேரடி விமான சேவை!
#SriLanka
#Flight
Mayoorikka
2 years ago
அர்கியா( Arkia) எயார்லைன்ஸ் இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் அர்கியா( Arkia) ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கையில் குறித்த விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.