இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் குழப்ப நிலை!
#SriLanka
#Human Rights
#Human activities
Mayoorikka
2 years ago
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையிலான நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
கடந்த காலங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல், ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்தமையினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பல தடவைகள் தலைவருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர் இது தொடர்பில் பொருட்படுத்தவில்லை என அதன் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பல தடவைகள் தெரிவித்ததாக தலைவர் பல்வேறு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட போதிலும், ஏனைய உறுப்பினர்களிடமிருந்து எவ்வித தொடர்புகளும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.