அரசியலமைப்பு பேரவை தொடர்பில் முக்கிய பரிந்துரையை நிராகரித்த ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
அரசியலமைப்பு பேரவை தொடர்பில் முக்கிய பரிந்துரையை நிராகரித்த ஜனாதிபதி!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்காக, அரசியலமைப்பு பேரவை வழங்கிய பரிந்துரையொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

 ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளர் எஸ். ரனுக்கேவின் பெயரே நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தின் போது, நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதன்போது அரசியலமைப்பு பேரவை, வழங்கிய பரிந்துரைகளை எவராலும் நிராகரிக்க முடியாது என பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக உறுப்பினர்களின் முக்கிய குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 எவ்வாறாயினும், இது தொடர்பாக அரசியல் அமைப்பு பேரவை இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!