பன்றிக்காய்ச்சல் குறித்து கால்நடை வைத்திய அதிகாரிகளின் அறிவிப்பு
#SriLanka
#doctor
#Lanka4
#sri lanka tamil news
#Virus
Prathees
2 years ago
மேல் மாகாணத்தில் பன்றிகளுக்கு பரவும் நோய் தொற்று நோயாக வளர்ச்சியடையவில்லை என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான போக்கு இல்லை என அந்த சங்கத்தின் தலைவர் டொக்டர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கலாநிதி சிசிர பியசிறி இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நோய் பரவுவது குறித்து எங்கள் கால்நடை துறையில் கால்நடை நிபுணர்கள் உள்ளனர்.
தொற்றுநோயியல் நிபுணர்கள் உள்ளனர். அந்த நிறுவனங்களிடம் இருந்து உறுதிப்படுத்தாமல் இந்த பிரச்சாரத்தை நாட்டுக்கு கொடுப்பது மிகவும் மோசமானது.
இது போன்ற தவறான பிரச்சாரம் நாட்டில் முன்வைக்கப்படுகிறதுஇ இது இந்த பன்றி தொழில்துறையின் பெரிய வீழ்ச்சிக்கு கூட வழிவகுக்கும் என்றார்.