கல்வி அமைச்சின் வழிகாட்டலில் மாணவர்களின் புறக்கீர்த்திய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற வேலை திட்டங்கள்

#Batticaloa #Ministry of Education #students
Prasu
2 years ago
கல்வி அமைச்சின் வழிகாட்டலில் மாணவர்களின் புறக்கீர்த்திய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற வேலை திட்டங்கள்

கல்வி அமைச்சின் வழிகாட்டலில் மாணவர்களின் புறக்கீர்த்திய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வேலை திட்டங்கள் பாடசாலை மட்டங்களில் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு அமைவாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கல்விக்கோட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கோட்ட மட்ட விளையாட்டு போட்டி இறுதி நிகழ்வுகள் நேற்று மாலை ஓட்டமாவடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கோட்டக்கல்வி பணிப்பாளர் V.T.அஜ்மீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் SMM.அமீர், பிரதேசத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக்,ஓட்டமாவடி அக்கீல் அனர்த்த அவசர சேவை மையத்தின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஏ.சீ.நியாஸ் ஹாஜியார் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள்,முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றுள்ளதுடன் அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையிலான மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ்வுகளும் இடம் பெற்றன.

போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு அதிதிகளினால் கேடயங்கள் மற்றும்நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/05/1685122953.jpg

images/content-image/1685122977.jpg

images/content-image/1685123118.jpg

images/content-image/1685123143.jpg

images/content-image/1685123164.jpg

images/content-image/1685123237.jpg

images/content-image/1685123279.jpg

images/content-image/1685123297.jpg

images/content-image/1685123316.jpg

images/content-image/1685123334.jpg

images/content-image/1685123350.jpg

images/content-image/1685123363.jpg

images/content-image/1685123379.jpg

images/content-image/1685123421.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!