ஜானக ரத்நாயக்க பதவி நீக்கம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு
#SriLanka
#Power
Mayoorikka
2 years ago
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்யும் பிரேரணைக்கு இ.தொ.கா ஆதரவளிக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் மே 24 ஆம் திகதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 7 ன் பிரகாரம் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.