காணாமல் போயுள்ள பல்கலைக் கழக மாணவன்!
#SriLanka
#University
#Missing
Mayoorikka
2 years ago
விடுதியில் தங்கியிருந்த பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை - சேரகம வெருன்கட்டிகொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக விடுதியின் உபவேந்தர் நேற்றுமுன்தினம் (21) பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில், பேராதனை பொலிஸார், பேராதனை பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.