மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மினுவாங்கொடையில் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Police
#Crime
#GunShoot
Mayoorikka
2 years ago
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (22) பிற்பகல் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த அடையாளந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்..
இதன்போது முச்சக்கரவண்டி சாரதியான 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.