அம்பலாங்கொடையில் உள்ள வீடொன்றில் சிதைவடைந்த சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது
#SriLanka
#Death
#Police
#Body
#Hambantota
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
அம்பலாங்கொடை, மாதம்பகம பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரின் சடலம் மிகவும் மோசமாக சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரும் அவரது மகளும் மட்டுமே குறித்த வீட்டில் வசித்து வந்ததாகவும் அவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் இருவருக்கு உணவு கொடுக்க வந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதன்படி இறந்தவரின் உடலை பொலிசார் கண்டெடுத்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.