கடந்த வாரத்தில் மட்டும் 189 பில்லியன் ரூபாய் நாணயங்களை அச்சிட்ட மத்திய வங்கி!

#SriLanka #Sri Lanka President #Central Bank #money
Mayoorikka
2 years ago
கடந்த வாரத்தில் மட்டும் 189 பில்லியன் ரூபாய் நாணயங்களை அச்சிட்ட மத்திய வங்கி!

கடந்த வாரத்தில் 189 பில்லியன் ரூபாய் (18,900 கோடி ரூபா) புதிய நாணயத்தை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.

 அத்துடன் மத்திய வங்கி மேலும் 180 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு கடனாக வழங்கியுள்ளது.

 அதற்கமைய, கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு வழங்கிய மொத்த கடன் தொகை 369 பில்லியன் ரூபாவாகும் (936,900 கோடிரூபா) ஆகும்.

 சமகால மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டதன் பின்னர் இதுவரை 1061 பில்லியன் ரூபா பெறுமதியான புதிய நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு ட்ரில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!