சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வு ஈடுபட்ட இருவர் கைது!
மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட சுற்றி வளைப்பின் போது கைது இவர்கள் செய்யப்பட்டு இன்று பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 24 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும் படி உத்தரவு பிறப்பித்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
20.05.2023.மஸ்கெலிய பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வின் பணிப்புரையின் படி மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் புரவுன்சீக் தோட்ட பகுதியில் சுற்றி வளைப்பு மேற்கொண்டு போது சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அகழ்வில் ஈடுபட்ட போது அங்கு அகழ்விற்க்கு பாவித்த ஆயுதம் மற்றும் கூடைகள் கைப்பற்றப் பட்டுள்ளது எனவும் அவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய பட்டு எதிர் வரும் 24.05.2023 அன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும் படி பணித்து உள்ளதாக அவர் கூறினார்.