மெக்ஸிகோ கார் பந்தைய போட்டியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 வீரர்கள் மரணம்
#Death
#Mexico
#GunShoot
#Player
Prasu
2 years ago
மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தையம் நடைபெற்றது. இந்த கார் பந்தையத்தில் 50க்கு மேற்பட்ட கார் பந்தைய வீரர்கள் பங்கேற்றனர்.
மேலும், இந்த போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். இந்நிலையில், கார் பந்தையத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
வேனில் வந்த கும்பல் கார் பந்தைய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் கார் பந்தைய வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.