350 டிப்ளோமா போதனாசிரியர் ஆசிரிய சேவைக்கு இணைப்பு

#SriLanka #Tamilnews
Prabha Praneetha
2 years ago
350 டிப்ளோமா போதனாசிரியர் ஆசிரிய சேவைக்கு இணைப்பு

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாவினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து வெளியேறியவர்களில் மத்திய கல்வி அமைச்சினால் வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்காக பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

 வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை வட மாகாண சபை இணையத்தனம் www.np.gov.ik மற்றும் வட மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் www.cfmin.mp.gov.lk எனும் முகவரியில் பார்வையிட முடியும்.

 மேலும் , தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை தயாரிப்பதற்கு ஏதுவாக 27.03.2023 ஆம் திகதி சனிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சில் ஆவணங்கள் சேகரிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதனால் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேர ஒழுங்கிற்கமைவாக கீழ்வரும் ஆவனங்களுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

 01. தேசிய அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி,

 02. பிறப்புப் பதிவுச் சான்றிதழ்

 03. பூரனப்படுத்தப்பட்ட தகவல் படிவம் (இணையத் தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்) 

04. விவாகச் சான்றிதழ் திருமணமான பெண்கள் மட்டும் சமர்ப்பித்தல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!