மது அருந்தி அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேர் கைது

#SriLanka #Arrest #Alcohol
Prasu
2 years ago
மது அருந்தி அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேர் கைது

மது அருந்தி அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர். நேற்று பிற்பகல் பாணந்துறை பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் வைத்து பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சிறுமிகள், ஒரு ஆண், ஒரு இளம் பெண் மற்றும் இரண்டு இளைஞர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் மது அருந்திவிட்டு அநாகரீகமாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்களிடமிருந்து பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதன்படி செயற்பட்ட பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஸ்தலத்திற்குச் சென்றபோது காரில் ஏறிச் செல்வதற்கு தயாரானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 அவர்கள் 6 பேரும் மது அருந்தியதால் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!