எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

#Death #America #world_news #Lanka4 #football
Prathees
2 years ago
எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

மத்திய அமெரிக்காவின் எல் சால்வடார் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 வாயில் கதவுகள் மூடப்பட்டதையடுத்து, ஏராளமான ரசிகர்கள் அரங்கிற்குள் நுழைய முயன்றதால், நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 மெமோரியல் மைதானத்தில் உள்ளூர் அணிகளான அலன்சா மற்றும் ஃபாஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

 உயிரிழந்தவர்களில் ஏழு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவதாகவும், உயிரிழந்தவர்கள் அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 மோதலை அடுத்து போட்டி இடைநிறுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!