புறக்கோட்டை ஓல்கொட் மாவத்தையில் சுகாதாரமற்ற 5 ஹோட்டல்களை மூட நீதிமன்றம் உத்தரவு
புறக்கோட்டை ஓல்கொட் மாவத்தை, அமைந்துள்ள 5 ஹோட்டல்களின் 'மிகவும் சுகாதாரமற்ற' நிலை காரணமாக அவற்றை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த 17-18 ஆம் திகதி இந்த ஹோட்டல்களை ஆய்வு செய்து அவை சுகாதாரமற்ற நிலையில் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டதையடுத்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த ஹோட்டல்களை பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னரே கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அங்கு இந்த ஹோட்டல்களை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தும் மிகவும் அசுத்தமான நிலையில் இந்த ஹோட்டல்களை தொடர்ந்து நடத்தி வந்ததையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.
மூடப்பட்ட 05 ஹோட்டல்கள் மிகவும் தூய்மையாக்கப்பட்டு குறைபாடுகள் அடுத்த மாதம் 16ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.